Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2023 09:00:10 Hours

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு) எல்பீ பலகல்ல காலமானார்

இராணுவத்தின் 16வது தளபதியான ஜெனரல் (ஓய்வு) எல்பீ பலகல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் வியாழக்கிழமை காலை (ஒக்டோபர் 26) காலமானார்.

இலங்கை பீரங்கி படையணியின் ஜெனரல் (ஓய்வு) எல்பீ பலகல்ல அவர்கள் 2000 - 2004 காலப்பகுதியில் இராணுவத்தின் 16 வது தளபதியாக பதவிவகித்த்துடன், 2003 ஆம் ஆண்டில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் பதவி வகித்தார். அவரது இறுதி கிரியைகள் சனிக்கிழமை (28 ஒக்டோபர்) மாலை 4.30 மணியளவில் பூரண இராணுவ மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறும். அவரது பூதவுடல் தற்போது இல. 21/12 சமனல வீதி, கொத்தலாவல, கடுவலையில் வைக்கப்பட்டுள்ளது.