26th October 2023 07:05:53 Hours
விசேட படையணியின் அடிப்படைப் பாடநெறி எண் – 54 இன் விடுகை நிகழ்வானது சனிக்கிழமை (ஒக்டோபர் 21) மதுருஓயா விசேட படையணி பயிற்சி பாடசாலையில் நிறைவு பெற்றது. இப் பாடநெறியில் 7 அதிகாரிகள் மற்றும் 113 சிப்பாய்கள் தீவிர ஒன்பது மாத அடிப்படைப் பயிற்சியினை பெற்றனர்.
இந் நிகழ்வில் விசேட படையணியின் படைத் தளபதியும், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார். விசேட படையணியின் நிலைய தளபதியான பிரிகேடியர் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, விசேட படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி டி.எஸ் ஹொரவலவிதான டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, ஆகியோர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
விசேட படையணி பயிற்சி பாடசாலையின் பிரதான பயிற்றுவிப்பாளரான மேஜர் எம்எல்டி வர்ணசிறி டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் தளபதியாக வண்ணமயமான விடுகை அணிவகுப்பு கட்டளை அதிகாரியாகவும் மேஜர் ஆர்எம்எ ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ இரண்டாம் கட்டளை அதிகாரியாக வழிநடத்தினர்.
பயிற்சியில் சிறப்பாகப் பங்கேற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் லெப்டினன் ஐகேஜீஎஸ்டி பண்டார சிறந்த உடல் தகுதி மற்றும் தந்திரோபாயத்தில் சிறந்த மாணவராக அங்கீகரிக்கப்பட்டார். சிறந்த துப்பாக்கி சூட்டு வீரருக்கான விருது இரண்டாம் லெப்டினன் எச்எம்எஸ் துஷானுக்கும், இரண்டாம் லெப்டினன் ஆர்டபிள்யூடிஎஸ் வலிகும்புர அவர்கள் விசேட படையணி அடிப்படை பாடநெறி எண் 54 இல் சிறந்த மாணவராகவும் கௌரவிக்கப்பட்டார்.
58 வது காலாட் படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யுகேஎன் ஏரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஐ.டி. மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் விசேட படையணியின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்பீகேஎல் அமரசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.