Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2023 14:48:35 Hours

பாகிஸ்தான் இராணுவத்தின் பங்களிப்பு பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தற்போது பாகிஸ்தான் இராணுவத் பதவி நிலை பிரதானி ஜெனரல் அசிம்முனிரை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 20) பொதுத் தலைமையகத்தில் சந்தித்தார். அதற்கமைய சனிக்கிழமை (ஒக்டோபர் 21) நடைப்பெற்ற விடுகை அணிவகுப்பில் கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் இராணுவத் பதவி நிலை பிரதானி அலுவலகம் அமைந்துள்ள பொதுத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை பாகிஸ்தான் இராணுவத் பதவி நிலை பிரதானி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இரு இராணுவத் தளபதிகளுக்கும் இடையிலான சுமூகமான சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தொழில் சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பிராந்திய அளவில் பாகிஸ்தான் இராணுவத்தின் தொழில்முறை மற்றும் பங்களிப்புக்காக இராணுவத் தளபதி தனது பாராட்டை தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் அதன் ஆயுதப் படைகளுடன், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் பயிற்சித் துறைகளில் இலங்கை அனுபவிக்கும் நட்பு மற்றும் வரலாற்று உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை பாகிஸ்தான் இராணுவத் தளபதி எடுத்துரைத்தார். தற்போதைய பரிமாற்ற திட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட பயிற்சி தொகுதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் கலந்துரையாடினர்.

வருகை தந்த இலங்கை இராணுவத் தளபதி, கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர் பொதுத் தலைமையகத்தில் உள்ள யாத்கர்-இ-ஷுஹத நினைவுச் சின்னத்தில் மலர் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தின் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.