21st October 2023 22:06:12 Hours
இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியும் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடப்ளியுஎஸ் ரத்நாயக்க என்டியு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2023 ஒக்டோபர் 15 – 19 வரையான காலப்பகுதியில் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி தனது 80 வது ஆண்டு நிறைவை இராணுவ மற்றும் சமய நிகழ்வுகளுக்கு மத்தியில் கொண்டாடியது.
முதலில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை, இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் மறைந்த போர்வீரர்களின் நினைவாக 99 மறைந்த போர்வீரர்கள் குடும்பங்கள் முன்னிலையில் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரின் முன்னிலையில் தலைமையக போர்வீரர்களின் நினைவு தூபியில் வழமையான நினைவஞ்சலி அணிவகுப்பு இடம்பெற்றது.
அதன்பின், இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி முதல் அருங்காட்சியகம் மற்றும் நூலகப் பிரிவான 'லெப்டினன் கேணல் டி.வி பரோஹியர் ஊக்க மையம்" திறப்பு விழா நடைபெற்றது. இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி மிக மூத்த ஓய்வுபெற்ற சமிக்ஞை அதிகாரியான பிரிகேடியர் எப்சீஜே சில்வா (ஓய்வு) யுஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியின் அழைப்பின் பேரில் நினைவுப் பதாதையை திறந்து வைத்தார்.
இரண்டு மாடிகளை கொண்ட இந்த அருங்காட்சியகம், சமீபத்தில் தொடங்கப்பட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாகும், மேலும் 80 ஆண்டுகளில் நினைவில் கொள்ள வேண்டிய தொழில்நுட்ப பரிணாமம், செயல்பாட்டுக் கடமைகள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சமிக்ஞை படையணியின் விரிவான வரலாற்றுப் பார்வையைப் படிக்க சிறந்த தளத்தை வழங்குகிறது. நூலகத்தில் 2000க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க புத்தகங்கள் உள்ளன.
அதே நேரத்தில் பிரிகேடியர் எப்சீஜே சில்வா (ஓய்வு) யுஎஸ்பீ, சமிக்ஞை சங்க தலைவர் மேஜர் ஜெனரல் கேஆர்பீ ரொவேல் (ஓய்வு) ஆர்டப்ளியுபீ வீஎஸ்வீ யுஎஸ்பீ யுஎஸ்ஏ சிஜீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் டிஏபீஎன் தெமடன்பிட்டிய (ஓய்வு) என்டியு பீஎஸ்சி ஆகியோர் இணைந்து சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
மாலை படையினரும் ஏனைய அழைப்பாளர்களும் இரவு முழுவதும் இடம்பெற்ற 'பிரித்' பாராயணம் நிகழ்வில் பங்குகொண்டதுடன் மறுநாள் (16) காலை அன்னதானம் இடம்பெற்றது.
வியாழன் (19) அன்று இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி பிரதான நுழைவாயிலில் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ஏகேடி அதிகாரி யுஎஸ்பீ அவர்களால் படைத் தளபதி வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், இலங்கை இராணுவ பிரதான சமிக்ஞை அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சேர்ந்து வழக்கமான அனைத்து நிலையினருடனான மதிய உணவில் பங்கேற்றதுடன் அங்கு சிறந்த அலகுக்கான கிண்ணம் 9 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணிக்கு வழங்கப்பட்டது. தொடர் நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக, இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்குபற்றிய இரவு உணவு விருந்து நடைபெற்றது. சேவையில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் குடும்பத்தினரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.