Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2023 22:14:17 Hours

கொக்கட்டிச்சோலை கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு வழங்கல்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 243 வது காலாட் பிரிகேடினரால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் 100 கர்ப்பிணித் தமிழ்ப் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை (20 ஒக்டோபர்) கொக்கட்டிச்சோலை கலாசார நிலையத்தில் சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையில் 243 வது காலாட் பிரிகேட் தளபதி ஏ.எம்.சி குமாரசிங்க அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் டி.எம்.என் பத்மசிறி மற்றும் அவரது படையினரின் ஆதரவுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளின் பேரில், இலங்கை மெதடிஸ்ட் திருச்சபையின் ஆயர், தேசிய கிறிஸ்தவ சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் மற்றும் சமாதானத்திற்கான சர்வமதக் கூட்டமைப்புச் செயலாளர் நாயகம் வண. எபினேசர் ஜோசப் ஆகியோர் இந் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கினர்.

மேலும், இந் நிகழ்வின் போது அம்பளாந்துறை கலைமகள் வித்தியாலயம் மற்றும் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட கலாசார நடனங்கள் வண்ணத்தையும் பொழுதுபோக்கையும் சேர்த்தன. மேலும், அனைத்து கர்ப்பிணிமார்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வண. எபினேசர் ஜோசப், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி , 243 வது காலாட் பிரிகேட் தளபதி ஏ.எம்.சி குமாரசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், கொக்கட்டிச்சோலை அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.