20th October 2023 07:40:38 Hours
இலங்கை இராணுவத்தின் 74 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விசுவமடு 55 வது காலாட் படைப்பிரிவின் 553 வது காலாட்பிரிகேட் படையினரின் அதிகாரவானையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென் உணவகம் சனிக்கிழமை (14 ஒக்டோபர் 2023) திறந்து வைக்கப்பட்டது.
இக் கட்டிடம் அதிகாரவானையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்களுக்கு முழுமையான வசதிகளை வழங்குகிறது. 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி.எஸ்.கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்கள் யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டமைப்பில் மாற்றம் மற்றும் மேம்பாடுகளை மேற்கொண்டார்.
மேலும், வளாகத்தில் புதிய விரிவுரை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெற்றது. இது படையணியின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக அம்சங்களின் பயிற்சி தொகுதிகளுக்கு இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு திட்டங்களுக்கும் 553 வது காலாட் பிரிகேடின் அனைத்து படையினரும் நிதியுதவி அளித்தனர்.
உணவக திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.