Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 21:04:04 Hours

பொது சேவை படையணி சேவை வனிதையரினால் கொள்ளுப்பிட்டி புனித மைக்கேல் கல்லூரி பிள்ளைகளுக்கு உதவி

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி நியங்கொட அவர்கள் சிறுவர் தினம் – 2023 ஐ முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 6) சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களுடன் கொள்ளுப்பிட்டி புனித மைக்கேல் கல்லூரியில் சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு சென்சேஷனல் லயன்ஸ் கழகம் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியது.

பொழுதுபோக்கு இசையுடன் பிள்ளைகளின் கலகலப்பான நடன நிகழ்ச்சி மற்றும் மனவளர்ச்சிக்கான ஊக்கமளிக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தது. வந்திருந்த அனைவருக்கும் ஆரோக்கியமான மதிய உணவு விருந்துடன் நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றதுடன் இது பிள்ளைகளுக்கு மறக்கமுடியாத மற்றும் மனதைக் கவரும் கொண்டாட்டமாக அமைந்தது.