Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 21:22:35 Hours

1 வது இராணுவ சமிக்ஞை படையணியின் 80வது ஆண்டு நிறைவு தினம் முல்லைத்தீவில்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 1 வது இலங்கை சமிக்ஞை படையணி தனது 80 வது ஆண்டு நிறைவை 2023 செப்டெம்பர் 30 முதல் 2023 ஒக்டோபர் 14 வரையான காலப்பகுதியில் சமய அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 1 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.டி.கே டி சில்வா, ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது. முதலில், 2023 செப்டெம்பர் 30 திகதி முழு இரவும் பிரித் பராயணம் தொடங்கியது, அதைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக மறுநாள் மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை (ஒக்டோபர் 7) வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அடுத்த நாள் (8 ஒக்டோபர்) படையணி குழுக்களுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

மேலும், செவ்வாய்க்கிழமை (10 ஒக்டோபர்) அனைத்து நிலையினரின் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மற்றும் ஆண்டுவிழா நாளில் (14 ஒக்டோபர்) கட்டளை அதிகாரிக்கு சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, நினைவுச் சின்னமாக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவில் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்குபற்றினர்.