15th October 2023 22:56:56 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஞாயிற்றுக்கிழமை (15 ஒக்டோபர்) தரம் 5 பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை 61 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மற்றும் 9 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, 6 பாடசாலைகளில் பரீட்சை எழுதவிருந்த 22 மாணவர்களுக்கு இராணுவத்தின் யூனிபப்ல்ஸ், படகுகள், வண்டிகள் மற்றும் ட்ரக் வண்டிகள் போன்றவற்றின் மூலம் காலை வேளையில் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டன.
மேலும் மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலி சித்துஹத் அறக்கட்டளையின் வண.கஹாகொல்லே சோமரதன தேரர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை ஹிட்டெட்டிய ரஜமஹா விகாரை தற்காலிகமக வசிக்கும் 72 குடும்பங்களைச் சேர்ந்த 242 உறுப்பினர்களுக்கு 200 சானிட்டரி நாப்கின் பொதிகளையும் 1000 குடிநீர் போத்தல்களையும் வழங்கினார்.
இவ் வழங்கல் நிகழ்வு சனிக்கிழமை (ஒக்டோபர் 14) விகாரை வளாகத்தில் இடம்பெற்றதுடன் வழங்கல் நிகழ்வில் 613 வது காலாட் பிரிகேட் தளபதியும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியும் பங்குபற்றினர்.