Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2023 22:26:15 Hours

யாழ். குடும்பத்திற்கு இராணுவத்தால் கட்டப்பட்ட 771வது வீடு

இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவுஸ்திரேலியாவில் ‘இமேஜின் கொம்பாஷன் இன்டர்நேஷனல் லிமிடெட்’ வழங்கிய அனுசரணையுடன் தகுதியான குடும்பத்திற்காக உரும்பிராயில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் 771 வது வீடு நிர்மாணிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 523 வது காலாட் பிரிகேடின் 11 வது களப் பொறியியல் படையணியின் படையினரால் யாழ் குடாநாட்டில் 771 வது வீடானது மற்றொரு குறைந்த வருமானம் கொண்ட கணவரை இழந்த பெண்ணின் மூன்று பிள்ளைகளின் குடும்பத்திற்காக இந் வீடு நிர்மாணிக்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள கிராமசேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இராணுவ அதிகாரிகள் இக் குடும்பத்தை தேர்வு செய்தனர்.

பயனாளிக்கு உத்தியோகபூர்வ சாவிகள் கையளிக்கும் நிகழ்வு யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 52வது காலாட் படைப்பிரவின் தளபதி மேஜர் ஜெனரல் வை.எ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது. 11 வது இலங்கை பொறியியல் படையணி மற்றும் 5 வது பொறியியல் சேவை படையணியின் படையினரால் புதிய வீட்டின் கட்டுமானம் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வீட்டின் நிர்மாண பணிக்கு இமேஜின் காம்பாஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் தேவையான நிதி வழங்கப்பட்டது. இரண்டு மாத குறுகிய காலத்திற்குள் கட்டுமானம் பணிகள் நிறைவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.

523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்.பி.எல் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 11 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கே.ஜீ.சீ.கே குடகமகே ஆகியோர் இத் திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி மேற்பார்வை