07th October 2023 14:36:37 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு சனிக்கிழமை (செப். 23) ஹெரலியாவலவில் உள்ள இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையத்தில் நடைபெற்ற அதன் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளி பிள்ளைகள் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கியது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த ஊக்கத்தொகைகளை வழங்கினார். அவர் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி குடும்பங்களின் தகுதியான பிள்ளைகளுக்கு பல சக்கர நாற்காலிகளையும் வழங்கினார்.
இராணுவ தளபதியும் கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இத்திட்டத்திற்கு தனது ஆசிகளை வழங்கினார்.