Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2023 17:26:55 Hours

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் கடற்கரை சுத்தம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் வியாழன் (செப். 21) சங்கமங்கிராமம் முதல் விநாயகபுரம் வரையிலான கடற்கரையோரத்தினை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

அதன்படி, திருக்கோவில் பிரதேச சபை மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் திருக்கோவில் பிரதேசவாசிகளின் ஆதரவுடன் படையினர் கடற்கரையோரத்தில் இருந்த மாசுக்கள் மற்றும் கழிவுப்பொருட்களை சேகரித்தனர்.

இந்த திட்டம் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 242 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி இந்த செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணித்தார்.