Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 18:29:37 Hours

ஓய்வுபெறும் போர் கருவி பணிப்பாளர் நாயகத்திற்கு பாராட்டு

இலங்கை இராணுவத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.எச்.ஜே.பி வணிகசேகர வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 10) குடும்ப உறுப்பினர்களுடன் தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 36 வருடங்களுக்கும் மேலாக சேவை செய்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான உரையாடல்களின் போது, நேசத்துக்குரிய நினைவுகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிறைந்த அவரது சேவையை பாராட்டினார். இராணுவத் தளபதி அவரது பொறியியல் திறன்கள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நடைமுறைகளை அவர் மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் உயர்வாகப் பேசினார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.எச்.ஜே.பி வணிகசேகர வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், இராணுவத்தில் பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் அவர் வழங்கிய வழிகாட்டுதலுக்கு தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது சேவையை ஆற்றுவதற்கு வழங்கிய ஆதரவையும் பாராட்டினார். சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்கான சிறப்பு நினைவுச் சின்னத்தையும், அவரது குடும்பத்திற்கு சிறப்பு பரிசையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு :-

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.எச்.ஜே.பி வணிகசேகர வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் 1987 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததும் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1989 டிசம்பர் 12 ஆம் திகதி சேவைப் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 02 ஆகஸ்ட் 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது இலங்கை இராணுவத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமாக பதவி வகித்துள்ளார். மற்றும் 11 வது வழங்கல் போக்குவரத்துப் பிரிவின் போக்குவரத்து அதிகாரி, 7 வது வழங்கல் பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 6 வது வழங்கல் பிரிவின் கட்டளை அதிகாரி, 11 பொது போக்குவரத்து படையின் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் நிறைவேற்று அதிகாரி, எயார் மொபைல் பிரகேட்டின் 120 வது படைக்குழுவின் கட்டளை அதிகாரி, 150 வது படைக்குழுவின்அதிகாரி கட்டளை, ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணியின் இராணுவ நிலைப்படுத்தல் இலங்கை படையலகின் வழங்கல் மற்றும் போக்குவரத்து அதிகாரி, இலங்கை சேவை படையணி பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், இராணுவத் தலைமையகத்தின் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 1 (வழங்கல்), 4 வது இலங்கை இராணுவ சேவை படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 52 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவ தலைமையகத்தின் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1 (போக்குவரத்து), 7 வது இலங்கை இராணுவ சேவை படையணியின் கட்டளை அதிகாரி, 23 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவ கேட்டரிங் படையலகின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ சேவை படையணியின் பிரதி நிலைய தளபதி, இராணுவத் தலைமையகத்தின் வழங்கல் போக்குவரத்து பணிப்பகத்தின் கேணல் (விநியோகம் மற்றும் போக்குவரத்து) மற்றும் இராணுவத் தலைமையகத்தின் வழங்கல் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் வழங்கல் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.எச்.ஜே.பி வணிகசேகர வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார், இளம் அதிகாரிகள் பாடநெறி, அலகு பயிற்சியாளர்களின் பாடநெறி, அதிகாரி பயிற்றுவிப்பாளர் பயிற்சி, சர்வதேச மனிதாபிமான சட்டம், அதிகாரிகளின் படையணி சமிக்ஞை பாடநெறி, அமைதி காக்கும் செயல்பாடுகள் பயிற்றுனர் பாடநெறி, உளவியல் செயல்பாடுகள் பயிற்சி பாடநெறி, அமைதிப் பாதுகாப்புப் பயிற்சிகள் பாடநெறி, இளம் அதிகாரிகளுக்கான வழங்கல் பாடநெறி - பாகிஸ்தான், இளம் அதிகாரிகள் பொறியியல் போக்குவருத்து பாடநெறி, மேம்படுத்தபட்ட பெட்ரோலிய பாடநெறி - பாகிஸ்தான், தொழிலான்மை பாடநெறி – பங்களாதேஷ், சிரேஷ்ட அதிகாரிகள் பாடநெறி – இந்தியா ஆகிய பாடநெறிகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பின்பற்றியுள்ளார்.

கம்போடியாவில் உள்ள II சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வழங்கல் மற்றும் விநியோகம் சிரேஷ்ட அதிகாரி முகாமைத்துவத்தின் முதுமானியும், ஐரோப்பிய நிபுணத்துவ கல்வி நிறுவனத்தில் வணிக முகாமைத்துவ டிப்ளமோ, சான்றிதழ் போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத கற்கைகளையும் படித்துள்ளார். சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான கல்வியற் கல்லூரியின் சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான பாடநெறி, சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான கல்வியற் கல்லூரியின் சர்வதேச வர்த்தகத்தில் உயர் சான்றிதழ் பட்டபடிப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான கல்வியற் கல்லூரியின் சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பட்டபடிப்பு ஆகியவைகளை கற்றுள்ளார்.