11th October 2023 17:48:14 Hours
சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து முடிந்த ’19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்’ சிறப்பான திறன்களை வெளிப்படுத்திய 8 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய இலங்கை தடகள அணியினர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புடன் திங்கட்கிழமை (ஒக்டோபர் 10) நாடு திரும்பினர்
இராணுவ தடகள குழுவின் உப தலைவர் பிரகேடியர் வீஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பிரதிநிதிகள், இராணுவ விளையாட்டு வீரர்களை வரவேற்றனர்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது, இலங்கை வீரர்கள் மொத்தம் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். அவர்களில், இராணுவ வீரர்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர்.
ஆசிய ஒலிம்பிக் கழகத்தின் 45 உறுப்பினர்களில் இருந்து 12,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் 23 முதல் ஒக்டோபர் 8 வரை 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
இராணுவ பங்கேற்பாளர்களின் சாதனைகள் பின்வருமாறு:
ஆண்களுக்கான 400மீ x 4 அஞ்சல் ஓட்டம் - வெண்கலப் பதக்கம்
பணிநிலை சார்ஜன் எச்கேகே குமாரகே இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
சார்ஜன் எஸ்ஏ தர்ஷன இலங்கை பீரங்கி படையணி
கோப்ரல் ஆர்எம்ஆர்என் ராஜகருணா இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
லான்ஸ் பெம்படியர் ஜிடிகேகே நிகு இலங்கை பீரங்கி படையணி
ஆண்களுக்கான 400மீ x 4 அஞ்சல் ஓட்டத்தில் போட்டியிட்ட விளையாட்டு வீரர்கள்
லான்ஸ் பெம்படியர் பீஎம்பீஎல் கொடிகார இலங்கை பீரங்கி படையணி
சிப்பாய் ஏவீடி தினுக தேஷான் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி
ஈட்டி எறிதல் (பெண்கள்) –வெள்ளி பதக்கம்
சார்ஜன் எச்எல்என்டி லேகம்கே இராணுவ மகளிர் படையணி
பெண்களுக்கான 400மீ x 4 அஞ்சல் ஓட்டம் - வெண்கலப் பதக்கம்
சார்ஜன் நதீஷா ராமநாயக்க இராணுவ மகளிர் படையணி