Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2023 17:51:09 Hours

மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பதவியேற்பு

மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதியாக திங்கட்கிழமை (9 ஒக்டோபர்) கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் புதிய தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதிக்கு இராணுவ தொண்டர் படையணியின் இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் இராணுவ மரியாதை செலுத்துப்பட்டது.

தனது பதவியை முறையாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

தளபதி இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் அனைத்து நிலையினருடனான தேனீர் விருந்துபசாரத்திற்கு முன் வளாகத்தில் ஒரு மாங்கன்றை நட்டார்.

தளபதி அவர்கள் தனது உரையின் போது அனைத்து நிலையினரின் அன்பான வரவேற்புக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன் 142 ஆண்டுகால இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பெருமைமிக்க வரலாற்றினை நிலைநாட்ட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி நிலைய தளபதி, பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, கேணல் ஒருங்கிணைப்பு, அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தொடர்பு அதிகாரிகள், இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.