09th October 2023 22:05:51 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 233 வது காலாட் பிரகேட்டின் முயற்சியால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களின் ஆபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வு திட்டம் வியாழக்கிழமை (ஒக்டோபர் 5) வாகரை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு பிரதேசத்திற்கான பிரதான இணைப்பாளர் திரு.பி.தினேஷ் அவர்கள் ஆற்றிய விரிவுரையை 200 ற்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களுடன் செவிமடுத்தனர்.
233 வது காலாட் பிரிகேட்டின் பதில் தளபதி கேணல் கே.எஸ்.பீ பொத்துப்பிட்டிய யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ , 233 வது காலாட் பிரிகேட்டின் 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 233 வது காலாட் பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி, புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் ஒருங்கிணைப்பாளர் லெப்டினட் கேணல் சந்திக்க ஏஹலபொல ஆகியோர் இத்திட்டத்தில் இணைந்து கொண்டனர்.