09th October 2023 21:45:20 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேட்டின் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி இரண்டு நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் அம்பாறை வதினாகலை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 185 மாணவர்களுக்கு பெருமளவிலான பாடசாலை உபகரணங்களை புதன்கிழமை (ஒக்டோபர் 4) வழங்கினர்.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் கருத்தியல் கருத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் 24 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 241 வது காலாட் பிரகேட்டின் அழைப்பின் பேரில் திரு விஜித குலதிலக மற்றும் திருமதி நிஷாதி குலதிலக்க ஆகியோரால் அனுசரணை வழங்கப்பட்டது.
நிகழ்வின்போது, பாடசாலைக்கு மிகவும் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில், கஸ்டப் பிரதேச கிராமப்புறத்தில் பாடசாலை இருப்பதால், சிறப்பு விருந்தாக அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், 241 வது காலாட் பிரிகேட்டின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் நன்கொடையாளர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் பலர் விநியோக நிகழ்வில் கலந்துகொண்டனர்.