08th October 2023 21:12:15 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்காக கொழும்பு, தெற்கு வைத்தியசாலையில் வைத்திய ஊழியர்களின் உதவியுடன் பொதுமக்களுக்கான கண் வைத்தியத்தை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர். அதன் போது 125 பார்வை குறைப்பாடுடைய பொதுமக்கள் வைத்திய பரிசோதனையில் கலந்து கொண்டனர்.
68 வது காலாட் படைப்பிரிவின் படையலகுகளின் படையினரின் ஆதரவுடன் செப்டம்பர் 27 அடையாளம் காணப்பட்ட பார்வை குறைபாடுடையவர்களுக்கு அவர்களின் வீட்டுகளுக்குச் சென்று கண்ணாடிகளை வழங்கினர்.
டாக்டர் வீ. சர்வேஸ்வரன் அவர்களினால் இச்சமூக திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டது.