Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2023 23:28:09 Hours

தளபதியை சந்தித்த கொரியத் தூதுவர் இராணுவத்தின் சேவைக்கு பாராட்டு

இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன்லீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் மீதுள்ள மரியாதை நிமித்தம் வெள்ளிக்கிழமை (06) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

இராணுவத் தளபதியுடனான சந்திப்பின் போது தூதுவர், நாட்டு நலன்களுக்காக இராணுவத்தினரின் அயராத பணிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை நினைவுகூர்ந்த இராணுவ தளபதி, எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின் முடிவில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.