Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2023 22:05:08 Hours

143 வது காலாட் பிரிகேடினால் புத்தளத்தில் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 143 வது காலாட் பிரகேட்டின் 16 வது கஜபா படையணியின் படையினரால் திங்கட்கிழமை (ஒக்டோபர் 02) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் தேவனுவர மைலாங்குளம் பாடசாலையில் 307 மாணவர்களுக்கு விசேட உணவு, விளையாட்டுகள் மற்றும் கலிப்சோ இசையை வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.

பிள்ளைகளுக்கு விளையாட்டு, பாட்டு, நடனம் போன்ற பல்வேறு அம்சங்களில் கற்பிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களும் இணைந்து தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

புத்தளம் மாவட்டத்தின் சமூக ஆர்வலர்களான திரு வை.எம்.ரிஸ்வி, திரு.எப்.எம்.நௌஷாத், மற்றும் திரு.நஸ்மி ஆப்தீன் ஆகியோர் இணைந்து சிறப்பு அனுசரணையை ஏற்பாடு செய்துடன் இதன்போது ரூ. 50,000/=பெறுமதியான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட 143 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்துகொண்டனர்.