Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2023 21:34:36 Hours

முல்லைத்தீவு படையினரால் கடற்கரையில் மாபெரும் இசை நிகழ்ச்சி

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் இணைந்து முல்லைத்தீவுபகுதியில் உள்ள சாதாரண குடிமக்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்காகவும் சனிக்கிழமை (செப்டம்பர் 30) கடற்கரையில் இசை நிகழ்ச்சியை நடாத்தினர்.

12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இசைக்குழுவினர், 3 வது கஜபா படையணியின் இசைக்குழுவினர் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 'சத்ரங்க' நடனக் குழு ஆகியோர் இணைந்து சமீபத்திய பிரபலமான மேற்கத்திய பாடல்கள் மற்றும் தமிழ் சிங்கள பாடல்களை கொண்ட இசை நிகழ்ச்சியை சுமார் 3 மணித்தியாலங்கள் நடாத்தினர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே, 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஏராளமான உள்ளூர் இசைப்பிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.