Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd October 2023 21:11:44 Hours

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையரால் பிள்ளைகள் மகிழ்விப்பு

இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் இணைந்து உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 1) போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் விஷேட நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குருநாகல் பிரதேசத்தில் வெவ்வேறு சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வசிக்கும் 100 சிறுவர்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வில்லு வளாகத்தைத் திறந்து வைக்க அவர் அழைக்கப்பட்டார். பின்னர் மங்கள விளக்கேற்றல், தேசிய கீதம் இசைத்தல், உயிரிழந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல்,போன்றன ‘த சல்யூட்’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

நிகழ்வின்போது, அந்த சிறார்கள் தங்கள் நாளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பார்வையாளர்கள் முன் தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும், மலியதேவ ஆண்கள் சிறுவர் இல்லம், குருநாகல், மலியதேவ பெண்கள் சிறுவர் இல்லம்குருநாகல், கிரி முதியன்சே ஆண்கள் சிறுவர் இல்லம், பொல்கஹவெல, ஸ்புட்னிக் பெண்கள் சிறுவர் இல்லம்குருநாகல் மற்றும் அலோக சிறுவர்கள் ஆண்கள் சிறுவர் இல்லம், ஆகியவற்றில் இருந்து மொத்தம் 100 சிறுவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில்அன்றைய பிரதம அதிதியிடமிருந்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பெற்றுகொண்டனர்.விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் சிரேஷ்ட சேவை வனிதையர் உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதன் போதுசேவை வனிதையர் பிரிவின் தலைவிவிஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால்ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு நிகழ்விலும் கலந்து கொண்டார். இங்கு சிவில் ஊழியர்களின் 20 பிள்ளைகளுக்குரூ. 15,000/= பெறுமதியான .பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன, பரிசுப் பொதியில் டிஎஸ்ஐ பரிசு வவுச்சர் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்களும் அடங்கியிருந்தன.

நிகழ்வின் முடிவில், நிகழ்வு நிறைவடைவதற்கு முன் அனைத்து சிறுவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் படைத் தளபதியுமானமேஜர் ஜெனரல் டி.எம்.கே.டி.பி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ, ஆர்எஸ்பீ மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீஅலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள்பலர் பங்கேற்றனர்.