02nd October 2023 23:31:45 Hours
பிரிகேடியர் ரஞ்சன் விஜயதாச ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எச்ஆர்எம் எம்எஎஸ் எல்ஐஎஸ்சீ என்டிசீ பீஎஸ்சீ எழுதிய ‘மிஹிதன் நொவு மினிசா’ (புதைக்கப்படாத மனிதர்கள்) என்ற புதிய புத்தகத்தின் முதல் பிரதி, சனிக்கிழமை (செப்டெம்பர் 28) மோதர இலங்கை கவச வாகனப் படையணியின் இடம்பெற்ற சுருக்கமான நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பீல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் புகழ்பெற்ற விரிவுரையாளரான திருமதி அமா திஸாநாயக்கவினால் ‘உந்துதல்’ பற்றிய விரிவுரை நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்புரையை இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜயவர்தன நிகழ்த்தினார். நூலின் ஆசிரியர் பிரிகேடியர் ரஞ்சன் விஜயதாச அவர்கள் ‘மிஹிதன் நொவு மினிசா’ என்ற நூலின் பிரதியை அன்றைய பிரதம அதிதிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் தனது சுருக்கமான உரையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பீல் அவர்கள் பிரிகேடியர் ரஞ்சன் விஜயதாசவைப் பற்றி பெருமைப்படுவதாகவும், மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர் அனுபவித்த அனுபவங்கள் குறித்து மேலும் பல புத்தகங்களை எழுதுமாறு வலியுறுத்தினார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவி ஆர்டப்ளியூபி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி எம்பில், முன்னாள் கடற்படைத் தளபதி எயார் மார்ஷல் ஆர்.எ.யூ.பீ ராஜபக்ச ஆர்எஸ்பீ மற்றும் இரண்டு பார்கள் வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, அட்மிரல் ரவி விஜய குணவர்தன (ஓய்வு), தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேஜர் ஜெனரல் டிஎஸ்பிஎன் போதேஜு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் ஏஎம் பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் ஜானக வல்கம (ஓய்வு) ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் ஜிஏ சந்திரசிறி (ஓய்வு) ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பகடுவ அவர்களின் துணைவியார் திருமதி லாலி கொப்பகடுவ மற்றும் பிரிகேடியர் ரஞ்சன் விஜயதாசவின் துணைவியார் திருமதி ருச்சி விஜயதாச ஆகியோரும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர். 2005 ஆம் ஆண்டு இலங்கை இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற பிரிகேடியர் ரஞ்சன் விஜயதாச அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவம் மற்றும் சர்வதேச மற்றும் ஐரோப்பிய முதுகலைப் பட்டங்களை உள்ளடக்கிய இரண்டு முதுகலைப் பட்டங்களை ஜெனீவா சுவிட்சர்லாந்து பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வீர விக்ரம விபூஷண மற்றும் ரண சூர பதக்கம் ஆகிய பதக்கங்களை பெற்றுள்ளதுடன், கறைபடியாத இராணுவப் பணிக்காக உத்தம சேவா பதக்கமும் பெற்றுள்ளார். இந்த சிரேஷ்ட அதிகாரி ஏற்கனவே “த அன்பெரிட் டேன்கர் மற்றும் பி என் ஒப்பிஸர் என்ட் ய ஜென்டில்மென் ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். பிரிகேடியர் ரஞ்சன் விஜயதாச அவர்களினால் நன்றியுரை ஆற்றப்பட்டது.