Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2023 23:19:51 Hours

முதியோர் இல்லத்திற்கு இலவச உணவு

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 1) விதுலிபுர சந்திரா விஜேரத்ன முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மதிய உணவை வழங்கினர்.

11 முதியோருக்கு இராணுவதினரால் மதிய உணவு மற்றும் பரிசில்களை வழங்கினர். இராணுவ கலிப்சோ இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது.

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.