27th September 2023 21:13:52 Hours
அமைதி மற்றும் பாதுகாப்புப் பணிகளில் பெண்களின் பங்கை மதிப்பிடுவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை (செப். 22) குகுலேகங்காவில் உள்ள இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டனர்.
அமெரிக்க தூதுக்குழுவில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பணியகத்தின் பணிப்பாளர் திருமதி வைலெடா ரோமன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பணியகத்தின் பணிப்பாளர் திருமதி வலேரி ஆன் பெக்லே, கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி நெல்சன், கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி திரு. மேதிவ் ஹின்சன், கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் வெளிவிவகார அதிகாரி கெப்டன் கெய்ட்லின் பென்னிகூக், பாதுகாப்பு அலுவலகத்தின் சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகாரி திரு. கபில திஸாநாயக்க ஆகியோர் இந் நிகழ்வில் கரந்துகொண்டனர்.
இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ் ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதுடன், நிகழ்வின் ஆரம்ப விளக்கக்காட்சி இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் ஜிஎச் அமித அவர்களினால் நடாத்தப்பட்டது.
அமைதி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் பெண்கள் என்ற தலைப்பில் செயலமர்வும் நடைபெற்றதுடன், அங்கு கருத்துக்களும் பரிமாறப்பட்டன. மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்பதை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பிரதிநிதிகள் குழு இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி வசதிகளையும் பார்வையிட்டது. மற்றும் 2024 பயிற்சி அட்டவணைக்கான உலகளாவிய அமைதி நடவடிக்கை முயற்சிகளில் மேலும் வாய்ப்புகளுக்கான ஆதரவை உறுதி செய்தது.
கலந்துரையாடலின் முடிவில், நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இந்த விசேட நிகழ்வில் மேஜர் பீஏ எஸ் கூரே, மேஜர் கேஎச்டி மெண்டிஸ், மேஜர் டபிள்யூபீஜி கலானி, லெப்டினன் டபிள்யூஎல்ஏ டி சில்வா மற்றும் மூன்று சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.