Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2023 21:40:23 Hours

கோப்ரல் மதுரங்க 2023 கட்டுகுருந்த தண்டர் ஸ்ட்ரைக் போட்டியில் முதலாம் இடம்

இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ரைடர்ஸ் சங்கம் ஞாயிற்றுக்கிழமை 24 செப்டம்பர் ஏற்பாடு செய்திருந்த தண்டர் ஸ்ட்ரைக் கட்டுகுருந்த– 2023 இன் தேசிய மட்ட மோட்டார் குரோஸ் நிகழ்வில் சுப்பர்மோட்டார் 250/450 சீசீ திறந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் பிஐ மதுரங்க அவர்கள் முதலிடத்தைப் பெற்றார்.

இலங்கையின் முப்டை மற்றும் பல்வேறு விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 60க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பங்குபற்றிய இப் போட்டியில் கோப்ரல் பிஐ மதுரங்க அவர்கள் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவைப் பிரதிநிதித்தி பங்குபற்றினார். கட்டுகுருந்த இலங்கை விமானப்படையின் மோட்டார் பாதையில் இப்போட்டி நடத்தப்பட்டது.