22nd September 2023 19:58:53 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கண்டி 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணிக்கு செவ்வாய்க்கிழமை (செப். 19) விஜயம் செய்தார்.
111 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யுஎம்எஸ்என் எரகொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களினால் காலாட் படைப்பிரிவின் தளபதி மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
அவரது வருகையின் நினைவுச் சின்னமாக முகாம் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. அவரது வரவேற்பைத் தொடர்ந்து, படையலகின் பங்கு, அதன் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விரிவான விளக்கத்தை அவர் பெற்றதுடன், படையினருக்கு உரையாற்றுவதற்கு முன் அவர்களின் வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டார். அவர் முகாம் வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், 11 வது காலாட் படைப்பிரிவின் முன்னேற்றத்திற்கான தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் நினைவுச்சின்னமா குழுப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.