20th September 2023 21:28:26 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப் பிரிவின் 28 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2023 செப்டம்பர் 12 சமூக நல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பொன்டேரா தனியார் நிறுவனத்தின் நிதியுதவியுடன், 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் யாழ். குடாநாட்டில் செல்வபுரம் மற்றும் யோகபுரம் பிரதேசங்களில் வசிக்கும் 100 ஏழை குடும்பங்களுக்கு தலா 5000/- பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
மேலும், அனுசரணையாளர்களின் ஆதரவுடன் இராணுவத்தினரால் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பொன்னாலை வரதராஜப் பெருமாள் பாடசாலை, சங்கரத்தை சின்னம்மா பாடசாலை மற்றும் கார்த்திகேயா பாடசாலை என்பவற்றிற்கு தலா 100,000/= ரூபாவை வழங்கினர். அந்த நிகழ்வுகளின் போது பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட 200 மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுபி வெலகெதர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் பொன்டேரா தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. நிமல்கமகே அவர்களுடன் பிரதம அதிதியாக இணைந்து அந்த ஆண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
51 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டி அனஸ் அஹமட் இந் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
இச் சமூக நலம் சார்ந்த இந்நிகழச்சியில் 511 வது காலாட் பிரிகேட் பிரதி தளபதி கேணல் டப்ளியுடிகேடீ பெரேரா ஆர்டப்ளியு ஆர்எஸ்பீ மற்றும் 9 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் நிமந்த ஜயதிலக ஆகியோரும் கலந்து கொண்டதுடன், இம் முயற்சிகளுக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இராணுவத்தை பாராட்டினர்.