19th September 2023 17:32:33 Hours
கொட்டாஞ்சேனை ஸ்ரீ பரமானந்த புராண விஹாரையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) வருடாந்த எசல மஹா ஊர்வலத்தை நடாத்துவதற்காக பௌத்த பிக்கு இராணுவ தளபதிக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 70 படையினர் தமது உதவியை வழங்கினர்.
இந்த புனித நிகழ்வில் இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டார். பிக்கு மற்றும் அறங்காவல் சபையினரின் வேண்டுகோளின்படி படையினரால் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வண்ணமயமான நிகழ்வை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.