15th September 2023 18:17:06 Hours
சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போர்ப் பயிற்சிப் பாடசாலை சிறைச்சாலை அதிகாரிகளுக்கான 16 நாள் சிறப்புப் புத்துணர்வு பாடநெறியை அண்மையில் நடத்தியது.
தனிப்பட்ட ஒழுக்கம், தலைமைத்துவப் பயிற்சி மற்றும் பயிற்சிகள் தொடர்பான பல்வேறு தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்தப் பாடநெறி அமையபெற்றதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 10 சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சியில் பங்குபற்றினர்.
பாடநெறியில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (செப்டம்பர் 14) போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் கலாநிதி சந்தன ஏக்கநாயக்க அவர்களும் இணைந்து கொண்டார்.
சிறைச்சாலை அதிகாரி பீடி பெரேரா பாடநெறியில் தகுதி வரிசையில் முதலிடம் பெற்றார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பிரதம சிறைக் காவலர் திரு.காவிந்த பிரேமவன்ச, மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.