14th September 2023 20:07:00 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருள் மற்றும் அதன் பாவனையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்துத் தெரிவிக்கும் உன்னத நோக்கத்துடன் காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர் 12) விழிப்புணர்வு பட்டறை நிகழ்த்தப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களின் கூட்டமைப்பு, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மத தலைவர்கள் மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினருடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
பாடசாலையில் நடைபெற்ற விரிவுரை அமர்வில் அப்பகுதியைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர் மற்றும் திட்டத்திற்கு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட திட்ட அலுவலர் திரு. அப்துல் ரஹீம் மற்றும் ஓய்வுபெற்ற உணவு மற்றும் பான பாதுகாப்பு அதிகாரி திரு. அப்துல் தஸ்தீர் ஆகியோர் ஆதரவு அளித்தனர்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ தனது தொடக்க உரையில் நாடு முன்னோக்கிச் செல்வதற்கும் அதன் இளம் தலைமுறையினருக்கும் கடுமையான சவாலாக இருக்கும் இந்த போதை பழக்கத்தால் ஏற்படும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல் தொடர்பாக தெரிவித்தார். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.
சமய மற்றும் சமூகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ , 243 வது காலாட் பிரிகேட் தளபதி, பிரதேச கட்டளை அதிகாரிகள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் திரு.ரவூப் மஜீத், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.