13th September 2023 19:58:35 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள், 61 வது காலாட் படைத் தலைமையகம் மற்றும் அதன் கட்டளைப் படையலகுகளுக்கு இரண்டு நாள் கள விஜயத்தை செபடெம்பர் 7 தொடக்கம் 8 வரை மேற்கொண்டார்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு, நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பூஸ்ஸ 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஐஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியு அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
முதல் நாளில், மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள், பூஸ்ஸ 61 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கும், மத்துகம 612 வது காலாட் பிரிகேட் தலைமையகத்திற்கும், கம்புருபிட்டிய 613 வது காலாட் பிரிகேட் தலைமையகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டதுடன், மறுநாள் 611 வது காலாட் பிரிகேட் மற்றும் பெரகலை 8 வது இலங்கை சிங்க படையணிக்கும் விஜயத்தினை மேற்கொண்டார்.
611, 612 மற்றும் 613 வது காலாட் பிரிகேட் தளபதிகள் மற்றும் 611, 612 மற்றும் 613 வது காலாட் பிரிகேடின் கீழுள்ள படையலகுகளின் கட்டளை அதிகாரிகளும் சிரேஷ்ட அதிகாரியை அந்தந்த இடங்களில் வரவேற்றனர். இந்த விஜயங்களின் போது, அவர் பணி, கடமைகள் மற்றும் அந்தந்த பகுதிகளின் தற்போதைய நிலைமை பற்றிய விரிவான விளக்கங்களைக் கேட்டறிந்தார். மேலும் அவர் ஒவ்வொரு இடத்திலும் படையினரின் கடமையை பாராட்டி உரையாற்றினார்.
வருகையின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், குழுப்படங்களை எடுத்துக் கொண்டதுடன், ஒவ்வொரு வளாகத்திலும் மரக்கன்றுகளையும் நட்டார். மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றினர்.