Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2023 20:09:43 Hours

இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதி தொழிற்கல்லூரிக்கு விஜயம்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (8) குட்டிகல இராணுவப் பொதுச் சேவைப் படையணி தொழிற்கல்லூரிக்கு விஜயம் செய்தார்.அவர் இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் செய்த முதல் விஜயமாகும்.

தொழிற் பயிற்சிப் கல்லூரியின் தளபதி கேணல் டிஎம்டிசி திஸாநாயக்க அவர்கள் அன்புடன் வரவேற்றத்துடன் வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. விஜயத்தின் ஒரு பகுதியாக, தளபதி தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை அடையாளப்படுத்தும் வகையில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு அழைக்கப்பட்டார்.

அதன் பின்னர், வருகை தந்த தளபதி அங்கு சேவையாற்றும் படையினருடன் கலந்துரையாடுவதற்கு முன்னர், பல்வேறு பாத்திரங்கள், பொறுப்புகள், பயிற்சித் திட்டங்கள், தொழிற் கல்லூரியில் வழங்கப்படும் பாடநெறிகள் மற்றும் நிர்வாக விடயங்கள் பற்றிய விரிவான விளக்கமொன்றை கல்லூரி தளபதி வழங்கினார்.

அதன்பின், தளபதி முகாம் வளாகம், பயிற்றுனர்கள் மற்றும் மாணவர்களின் நலன்புரி வசதிகள் மற்றும் 1 வது இராணுவப் பொதுச் சேவைப் படையணி மற்றும் 2 வது (தொ) இராணுவப் பொதுச் சேவைப் படையணிகளுக்கு சொந்தமான இரண்டு பண்ணைகளையும் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மாநாட்டு மண்டபத்தில் அனைத்து படையினருக்குமான உரையில், நல்ஒழுக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் நிலையான பயிற்சியை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல முக்கிய காரணிகளை வலியுறுத்தினார்.

இந்த சிறப்பு நிகழ்வை நினைவுகூரும் வகையில், தளபதியுடன் சில குழுப்படங்களும் எடுக்கப்பட்டன.

இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் நிலையத் தளபதி கேணல் எம்கேஎஸ்எஸ் டி சில்வா மற்றும் படையணியின் சில சிரேஷ்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.