Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2023 08:06:47 Hours

இராணுவ வலைப்பந்து அணிக்கு ‘விளையாட்டு விஞ்ஞானம்’ பற்றிய அறிவு

விளையாட்டு பணிப்பகம், விளையாட்டுத்துறையின் அறிவியல் அம்சங்களைப் பற்றிய அறிவை வளர்க்கும் நோக்கத்துடன், சர்வதேசப் பதக்கங்களை அடைவதற்காக விளையாட்டு செயல்திறன் தரத்தை உயர்த்தும் வகையில், 'விளையாட்டு உளவியல்' என்ற தலைப்பில் மேலும் ஒரு விரிவுரை அமர்வை ஓகஸ்ட் 31, இலங்கை இராணுவ வலைப்பந்து அணி வீரர்களுக்கு பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் நடாத்தியது.

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி ‘விளையாட்டு விஞ்ஞானம்’ குறித்த கல்வித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை இராணுவ விளையாட்டு உளவியலாளர் கெப்டன் ஓடிஎஸ்கே ரூபசிறி அவர்கள் இராணுவத்தின் திறமையான விளையாட்டு வீராங்கனைகளுக்கு விரிவுரைகளை வழங்கினார்.

இலங்கை இராணுவ வலைப்பந்து குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜேகேஆர் ஜெயக்கொடி ஆர்டபிள்யுபீ யுஎஸ்பீ, அவர்களினால் வசதிகள் வழங்கப்பட்டதுடன் இராணுவ வலைப்பந்தாட்ட குழுவின் செயலாளர் மேஜர் பீஎம்எஸ் அபேகுணவர்தன அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.