13th September 2023 08:14:07 Hours
சனிக்கிழமை (செப்டெம்பர் 09) வாத்துவ விஜயகுமாரதுங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அகில இலங்கை சக்தி பளு தூக்கும் போட்டியில் இலங்கை இராணுவ பளு தூக்கும் வீரர்கள் மேலும் பத்து போட்டி அணிகளை வீழ்த்தி ஒட்டுமொத்த தேசிய சாம்பியன்ஷிப்பை (ஆண்கள்) வென்றனர்.
இதன்படி, இலங்கை இராணுவ வீரர்கள் (66 கிலோகிராம்), (93 கிலோகிராம்) மற்றும் (120 கிலோகிராம்) 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். சிறந்த பளு தூக்கும் வீரருக்கான விருதை 6 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சார்ஜென்ட் ஆர்டிசிகே ராஜபக்ஷ அவர்கள் வென்றார்.
இதே போட்டியில் கோப்ரல் ஆர்எம்எஸ்எஸ் ரத்நாயக்க 105 கிலோ பிரிவிலும் 120 கிலோ பிரிவில் சிப்பாய் கேடி விமந்த ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். சிப்பாய் எச்ஏஎஸ்எஸ் ஹெட்டியாராச்சி, லான்ஸ் கோப்ரல் டபிள்யூவிஎஸ்சி ஜயரத்ன ஆகியோர் 2 வெள்ளிப் பதக்கங்களையும், கோப்ரல் டிஎஸ்சி ராமநாயக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.