Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2023 09:04:52 Hours

மறைந்த கேணல் ஆர். ஹரேந்திரன் (ஓய்வு) அவர்களுக்கு இராணுவ இறுதி மரியாதை

25 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை பீரங்கி படையணியின் கேணல் ஆர்.ஹரேந்திரன் (ஓய்வு) அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு அமைய இராணுவத் தோழர்கள் மற்றும் உரவினர்களின் பங்குபற்றலுக்கு மத்தியில் அவரது இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (11) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.

ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், முதன்மைப் பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் மறைந்த அதிகாரிக்கு இறுதிமரியதை செலுத்தினர்.

இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினரால் தேசியக் கொடி போர்த்திய பேழையை துப்பாக்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயான நுழைவாயிலுக்கு அருகில் மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளால் சவப்பேழை முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் உடல் தாங்கிய பேழையின் பின்னால் அணிவகுத்து சென்றனர்.

இலங்கை இராணுவ பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் அவர்களால் சிறப்பு கட்டளைப் பகுதி I வாசிக்கப்பட்டது. இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க படையினர், அடையாள துப்பாக்கி மரியாதை செலுத்தினர், இது ஒரு இராணுவ அதிகாரிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அஞ்சலியாகும்.

இறுதி சில நிமிடங்களுக்குப் பின்னர், பியுகல் ஒலியின் பின்னர் சிரேஷ்ட அதிகாரியின் உடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களால் துயரமடைந்த குடும்பத்திற்கு அவரது பதக்கங்கள் வழங்கப்பட்டன. கேணல் ஆர்.ஹரேந்திரன் (ஓய்வு) அவர்கள் ஆயுத படை பாரம்பரியத்தின் புகழ்பெற்றவராவர்.

கேணல் ஆர். ஹரேந்திரனின் (ஓய்வு) இறுதிச் சடங்கில் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.