Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2023 19:46:23 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் 5ம் தர புலமைபரிசில் மாணவர்களுக்கு கருத்தரங்கு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவிக்கரம் வழங்கும் நோக்கில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21 வது காலாட் படைப்பிரிவின் 211 வது காலாட் பிரிகேட் படையினரால் பதவிய பிரதேசத்தில் உள்ள 500 மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகளை அநுராதபுரம், பதவிய, புத்தங்கல மத்திய கல்லூரியில் செப்டம்பர் 9 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தனர்.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டப்ளியுபீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 211 வது காலாட் பிரிகேடின் ஆதரவுடன் இராணுவ ஒருங்கிணைப்பின் ஊடாக ‘இமாஷி பப்ளிகேஷன்ஸ்’ வழங்கிய அனுசரணையுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கருத்தரங்குகளின் போது மாணவர்களுக்கு கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ என் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இமாஷி பப்ளிகேஷன்ஸின் நன்கொடையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பதவிய மக்கள் வங்கிக் கிளையின் அதிகாரிகள், 9 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த சமூகத் திட்டத்தில் கலந்துகொண்டனர்.