11th September 2023 15:59:19 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவிற்கு பதக்கம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் வெளிநாட்டு நடவடிக்கைகள் கேணல் பீபீசீ பெரேரா பீஎஸ்சீ ஆகியோருடன் விஜயம் ஆமற்கொண்டுள்ள இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் வியாழக்கிழமை (7) லெபனான் கிரீன்ஹில், நக்கோரா, ஸ்ரீ பேஸ் முகாமில் படையினருக்கு உரையாற்றினார்.
படையினருக்கான உரையின் போது ஐநா சூழலில் லெபனான் மக்களின் இதயங்களையும் மனதையும் வென்றெடுக்கும் அதே வேளையில், இலங்கையின் ஒழுக்கமான ஆண் மற்றும் பெண்கள் இராணுவ வீரர்களாக லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையணிக்கு மதிப்புமிக்க சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை இராணுவ பதவி நிலை பிரதானி வலியுறுத்தினார். மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கை அமைதி காக்கும் படையினரின் பயனுள்ள பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.
படையினருக்கான உரையின் பின்னர், 14 வது பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் டிபீஎல்டி கலுஅக்கல அவர்களுடன் முகாம் வளாகத்தில் களப் பயணம் மேற்கொண்டதுடன் அங்கு பணியாற்றும் படையினரின் ஒரு பிரிவினருடன் கலந்துரையாடினர்.
இவ் விஜயத்தின் போது மருத்துவப் பிரிவு, களஞ்சியசாலை, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பட்டறை மற்றும் பிற பிரிவுகளை தூதுக்குழு ஆய்வு செய்தது.
அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், ஸ்ரீ பேஸ் முகாமுக்கு அவர்கள் வருகை தந்ததை நினைவுகூரும் வகையில் பாதுகாப்பு படை குழுவின் தளபதியினால் தூதுக்குழுவினருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.