Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2023 22:00:21 Hours

கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி திருகோணமலையில் வழங்கல் கட்டளை அதிகாரிகளை சந்திப்பு

கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டப்ளியுடிசி மெத்தானந்த யுஎஸ்பீ என்டிசி அவர்கள் அப்பகுதியிலுள்ள அனைத்து வழங்கல் கட்டளை அதிகாரிகளை சந்திக்கும் நோக்கத்துடன் புதன்கிழமை (செப். 06) திருகோணமலையில் உள்ள 22 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம் செய்தார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வழங்கல் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் இக் கலந்துரையாடலில் விவாதங்கள் அந்தந்த பிரிவுகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மையமாக இருந்தன.