Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2023 22:13:48 Hours

52 வது காலாட் படைப்பிரிவு படையினரின் உதவியுடன் இயக்கச்சியில் தீ அணைப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெள்ளிக்கிழமை (செப். 8) இயக்கச்சி, முஹாவிலில் உள்ள தென்னை நார் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் படி இயக்கச்சி தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து 60 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இராணுவ நீர் பவுஸர்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

1 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி மற்றும் 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி ஆகியோர் படையினரின் பங்களிப்பை மேற்பார்வையிட்டனர்.