09th September 2023 22:03:54 Hours
சீரற்ற காலநிலை காரணமாக வனத்தமுல்லை உள்ளிட்ட கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதி பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை அறிந்த வனாத்தமுல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் ஞாயிற்றுக்கிழமை (செப். 03) 6 வது கஜபா படையணி மற்றும் 14 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் போது, நீர் மட்டம் பெருகியதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்த 08 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் உணவுகளை பெற்றுக்கொண்டனர்.
அதே நாளில், புறக்கோட்டை ரயில் நிலையம் அருகே, மரம் ஒன்று சாலையில் விழுந்து, அப்பகுதியில் வாகன போக்குவரத்து மற்றும் அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இருந்தது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் ஆதரவுடன் 14 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து மரத்தை அகற்றினர்.
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிடப்ளியுஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ மற்றும் 142 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேகேஆர்பீ ஜயசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டலின்படி உணவு விநியோகம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.