06th September 2023 18:05:31 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவில் தேசிய மாணவசிப்பாய் படையணி பயிற்சிப் பிரிவை திங்கட்கிழமை (செப்டெம்பர் 4) திறந்து வைக்கும் நிகழ்விற்காக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த இராணுவத்தின் நந்திக்கடல் படையலகு பயிற்சிப் பாடசாலையை பாதுகாப்பு அமைச்சிக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கியது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களிடம் இருந்து அதிகாரமாற்றம் தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.
வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்கள் வரவேற்றார். அமைச்சர் அதன் பின்னர் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களிடம் உரையாற்றியதுடன் எதிர்காலத்தில் நாட்டின் நலனுக்காக தேசிய மாணவசிப்பாய் படையணியின் தேவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அதன் பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் நந்திக்கடல் படையலகு பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்தார். நந்திக்கடல் படையலகு பயிற்சிப் பாடசாலை தொடர்பான ஆவணங்கள் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்களினால் தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அமைச்சருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.