Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2023 11:40:58 Hours

கின்னஸ் உலக சாதனைக்கான நடைப்பயணம்

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணியாற்றும் 3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் சிரேஷ்ட அதிகாரவானணயற்ற அதிகாரி ஒருவர் யாழ். குடாநாட்டில் பருத்தித்துறையில் இருந்து செவ்வாய்க்கிழமை (செப். 5) கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இணைவதற்காக 578 கிமீ தூரத்தை 12 நாட்களுக்குள் நடைபயணமாக மேற்கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அநுராதபுரம், குருநாகல், கொழும்பு, அளுத்கம, காலி மற்றும் மாத்தறை ஊடாக பயணத்தை மேற்கொண்டு தேவேந்திர முனையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) க்கு முன்னர் அடைவதற்கு பணிநிலை சார்ஜன்ட் கேஐஎஸ் கீர்த்திரத்ன திட்டமிட்டுள்ளார்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியுபீஎஸ்சீ, 3 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் யுஎல்டிசி பெரேரா ஆகியோர் கின்னஸ் உலக சாதனைக் குழுவின் பிரதிநிதிகளுடன் பருத்துறையில் சமய ஆசீவாதங்களுக்கு மத்தியில் பயணத்தை ஆரம்பித்து வைத்தனர்.

சாதனையாளரான பணிநிலை சார்ஜன் கேஐஎஸ் கீர்த்திரத்னவுக்கு ஆதரவை வழங்கும் வகையில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.