05th September 2023 23:02:18 Hours
நாட்டில் ஏற்படும் எந்தவொரு இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தம் அல்லது பேரழிவிற்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ள இலங்கை இராணுவம், அனர்த்த முகாமைத்துவ பயிற்சி அமர்வுகளை நடாத்துவதன் மூலம் அதன் உறுப்பினர்களை எந்தவொரு நிகழ்வுக்கும் நன்கு தயார்படுத்தியுள்ளது.
கொழும்பில் தீயணைப்பு சேவை திணைக்களத்துடன் இணைந்து தீயை அணைப்பதற்காக ‘பயிற்சியாளரைப் பயிற்றுவித்தல்’ என்ற தொனிப்பொருளில் ஒரு அமர்வு, 2023 செப்டம்பர் 1-3 இல் மத்தேகொட பொறியியல் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
அதன்படி, இலங்கை இராணுவத்தின் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் இராணுவப் பயிற்சிப் பாடசாலைகளை சேர்ந்த 10 அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உள்ளடங்கலாக, கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்கள பிரதான தீயணைப்பு அதிகாரி திரு. கமல் வில்சன் மற்றும் கொழும்பு உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பயிற்சி கல்வியற்கல்லூரியின் நிபுணர்களான திரு.ரஞ்சன் குமார, திரு. ரசிக அபேவிக்ரம அவர்களால் அடிப்படை தீயணைக்கும் நுட்பங்களின் கோட்பாடு மற்றும் நடைமுறை அம்சங்கள் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்டன.