05th September 2023 23:07:57 Hours
வெரஹரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 31) படையணியின் புகழ்பெற்ற மருத்துவ அதிகாரியாக இருந்து ஓய்வுபெறும் பிரிகேடியர் எஸ்என் சேமகே யுஎஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
அன்றைய நிகழ்வில் நுழைவாயிலில் வழக்கமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதினை தொடர்ந்து வெளியேறும் பிரிகேடியர் எஸ்என் சேமகே யுஎஸ்பீ அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவ சுகாதார சேவை பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ மருத்துவ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இவ் விழா நடைபெற்றது.
பிரிகேடியர் கேஎஸ்டி கருணாரத்ன, பிரிகேடியர் டப்ளியுஎம்டிகிவ்பீ விஜேரத்ன, பிரிகேடியர் என்கே ஆரியரத்ன யுஎஸ்பீ, பிரிகேடியர் பீடிஆர் மகுலொலுவ, பிரிகேடியர் எம். முத்துமலை மற்றும் பிரிகேடியர் பீஜீ விக்கிரமசூரிய ஆகியோரின் பங்குபற்றலுடன் பிரியாவிடை இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.