05th September 2023 23:11:40 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் எம்.எஸ் தேவப்பிரிய யுஎஸ்பீ என்டிசி அவர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
64 வது படைப்பிரிவின் புதிய தளபதி பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அலுவலக வளாகத்துக்குச் செல்லும் முன் நினைவுச் சின்னமாக மரக்கன்று நடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவரது அலுவலகத்தில் புதிய தளபதி மகா சங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் அவரது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். சிறிது நேரம் கழித்து, அவர் படைப்பிரிவு தலைமையகத்தில் படையினருக்கு உரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 64 வது காலாட்படை பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.