05th September 2023 23:15:36 Hours
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் உலக தென்னை பயிற்செய்கை தினத்தினை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 3) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு பயனாளிகளை அழைத்து 300 முல்லைத்தீவு பொதுமக்களிடையே 1850 தென்னைபிள்ளைகளை வழங்கி வைத்தது.
இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க 'மனுசத் தெரண' அறக்கட்டளை மற்றும் சிலாபம் பிளான்டேஷன் பிரைவேட் லிமிடெட் இந்த சமூக திட்டத்திற்கு அனுசரணையை வழங்கியது. முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு, 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
68 வது காலாட் படைப்பிரிவின் படையினர் இந்த விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள சமயப் பிரமுகர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள், ‘மனுசத் தெரண’ நிறுவனத்தின் தயாரிப்பு முகாமையாளர் திரு.அருண சொய்சா, சிலாபம் பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் ஜூட் ரூகாந்த பெரேரா மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.