Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2023 06:57:00 Hours

வழங்கல் கட்டளையின் ‘முகாமை முறைமை’ மற்றும் புதிய இணையப்பக்கம் அறிமுகம்

இலங்கை இராணுவத் வழங்கல் கட்டளை தலைமையம் அதன் புதிய உத்தியோகபூர்வ இணையப் பக்கத்தையும் ‘முகாமை முறைமை’ இணையப் பயன்பாட்டையும் செவ்வாய்கிழமை (செப்டெம்பர் 5) இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் இராணுவ வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி வழங்கிய வழிகாட்டுதல்கள் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு குறுகிய காலத்தில் புதிய இணையப்பக்கத்தை வடிவமைக்க உதவியது.

இராணுவத் வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி இராணுவத் தலைமையகத்தின் பல்செயல்பாட்டு மண்டபத்திற்கு வருகைதந்த அன்றைய பிரதம அதிதியை வரவேற்றார்.

இராணுவத் வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களினால் புதிய இணையப்பக்கம் மற்றும் ‘முகாமை முறைமை’ மென்பொருள் பயன்பாட்டை அறிமுகப்படுத்த இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார்.

இணையப்பக்கமானது வழங்கல் கட்டளை வரலாறு, கட்டளை சங்கிலி, பயிற்சி மற்றும் கருத்தரங்குகள், தொடர்புத் தகவல் மற்றும் வழங்கல் கட்டளையுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் காட்டுகிறது.

‘முகாமை முறைமை’ மென்பொருள் இராணுவத்தில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளிலும் விநியோகிக்கப்படும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் தொடர்புடைய பதிவுகளை பராமரிப்பதுடன் இதன் மூலம் அனைத்து இராணுவ தொழில்சார் படையினர் அவர்களின் குறிப்பிட்ட கடமை மற்றும் வேலை ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான தகவல்களை அணுகலாம்.

புதிய தொழில்நுட்ப யுத்திகள் வழங்கல் கட்டளையின் வழங்கல் தேவைகளை சீராக நிர்வகித்தல், நடத்துதல் மற்றும் தொழில்சார் படையினர் மற்றும் இராணுவத்தில் உள்ள பல்வேறு துறைகள் தொடர்பான விவரங்களை வழங்கும்.

1969 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை 'ஆதரவு குழுவாக' வழங்கல் பிரிவு, பனாகொடவில் உள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணி, இராணுவ போர் கருவி படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி ஆகியவற்றின் பிரிவுகளுடன் செயற்பட்டது. 1980 ஆம் ஆண்டில், இராணுவத்தில் வழங்கல் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஒரு தனியான வழங்கல் கட்டளை நிர்மாணிக்கப்பட்டதுடன் அதன் தலைமையகம் 1998 இல் கொஸ்கம, சலாவவிற்கு மாற்றப்பட்டது.

இலங்கை இராணுவம், போர் ஆயுதங்கள், போர் ஆதரவு ஆயுதங்கள் மற்றும் சேவைப் படையணிகளுடன் தொடர்புடைய 132 பல்வேறு தொழில்சார் அமைப்புக்களை கொண்டுள்ளது. 'துறைசார் சோதனை' பயன்பாடு நிச்சயமாக வழங்கல் கட்டளையில் உள்ள அனைத்து துறைகளையும் புதுப்பிக்கும்.

நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதிக்கு வழங்கல் கட்டளைத் தளபதியினால் பாராட்டு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் விஜயபாகு காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.