04th September 2023 19:06:24 Hours
போர்வீரர்கள் விவகார பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிசிசிடிஆர் வைத்தியசேகர ஆர்எஸ்பீ அவர்கள், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இயங்கும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள ரணவிரு அமைப்பின் அதிகாரிகளை கண்டியில் உள்ள 2 (தொ) இலங்கை சிங்கப் படையணியில் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, உயிரிழந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பான விடயங்கள் மீளாய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், ரணவிரு அமைப்புக்களின் எதிர்கால இலக்குகள் மற்றும் நோக்கங்கள் என்பன வருகை தந்த பணிப்பாளரினால் சபைக்கு முன்வைக்கப்பட்டன.
இதேவேளை, தம்புள்ளை திகம்பத்தனையில் மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை போர்வீரர்கள் விவகார பணிப்பாளர் பார்வையிட்டார்.
இந்த ரணவிரு அமைப்புக்கள் தற்சமயம் மாவட்ட மட்டங்களில் செயற்படுகின்றன. இது போர்வீரர் குடும்பங்களுக்கு அதிகபட்ச நலத்திட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.