04th September 2023 19:20:49 Hours
கடந்த செவ்வாய்கிழமை (ஓகஸ்ட் 29) தெய்வேந்திர முனையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் பயணம், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், ஞாயிற்றுக்கிழமை (செப். 3) பருத்தித்துறையில் 582 கிலோமீற்றர் பயணத்தை நிறைவு செய்தது.
மூன்று இராணுவ வீரர்களான, மேஜர் ஜெனரல் எஸ்ஆர் பாலசூரிய (ஓய்வு) யுஎஸ்பீ, மேஜர் ஜெனரல் கேபீஎஸ் பிரேமலால் (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் கேணல் டபிள்யூஎன்பீஎஸ்கே பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர் வடக்கு மற்றும் தெற்கு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.
வாழ்த்துக்களுக்கு மத்தியில் 6 நாள் நீண்ட பயணம், பருத்தித்துறையை சென்றடைவதற்கு முன்னர் காலி, அளுத்கம, கொழும்பு, நீர்கொழும்பு, புத்தளம், மதவாச்சி, வவுனியா, கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு ஊடாக அவர்கள் பயணித்தனர்.
சேவை மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர், குறிப்பிட்ட இடங்களில் வெவ்வேறு படைப்பிரிவுகளின் ஒவ்வொரு படையணிகளின் சைக்கிள் ஓட்டுநர்களில் இருந்து மூன்று பேர் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு இவர்களை ஊக்கப்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கதாகும்.